எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் மறுபக்கத்தில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ தீவிரவாதிகள் காத்திருக்கிறார்கள்: உளவுத்துறை தகவல்
நகர், அக்.9: ஜம்மு காஷ்மீர் எல்லையில் நவீன கண்காணிப்பு சாதனங்கள் பயன்படுத்துவதால் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளின் ஊடுருவல் வெற்றிபெறவில்லை என்று மூத்த எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் நகரில் காஷ்மீர் எல்லைப்பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி அசோக் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் விழிப்புணர்வு மற்றும் நவீன கண்காணிப்பு சாதனங்களை பயன்படுத்துவது, எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ராணுவத்தின் ஆதிக்கம் செலுத்தியவிதம் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பதை உறுதி செய்துள்ளன.