உலக துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சம்ரத் ராணா தங்கம் வென்று அசத்தல்!
கெய்ரோ: உலக துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சம்ரத் ராணா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சம்ரத் ராணா தங்கப் பதக்கம் வென்றார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய இளம் வீரர் சம்ரத் ராணா ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த 20 வயது வீரரான சாம்ராட் ராணா, இறுதிச்சுற்றில் தனது துல்லியமான இலக்குத் திறனால் ஆதிக்கம் செலுத்தினார்.