Select Location
All Locations
State
Region
City / District
பணி நியமன புதிய கொள்கை அடுத்த பட்ஜெட்டில் அறிமுகம்: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு

பணி நியமன புதிய கொள்கை அடுத்த பட்ஜெட்டில் அறிமுகம்: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு

கொல்கத்தா: கடந்த திரிண​மூல் காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தின் போது பணி நியமனத்​தில் நடந்த ஊழல்​களால் மேற்கு வங்​கத்​துக்கு அவப்​பெயர் ஏற்​பட்​டது. எனவே, அடுத்த பட்​ஜெட் தொடரில் புதிய பணி நியமனக் கொள்கை அறிவிக்​கப்​படும் என்று முதல்​வர் சுவேந்து அதி​காரி தெரி​வித்​தார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் நேற்று நடை​பெற்ற ரோஜ்கர் மேளா​வின் போது பணி நியமனம் செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு ஆணை​களை முதல்​வர் சுவேந்து அதி​காரி வழங்​கி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: இதற்கு முன்பு திரிண​மூல் காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தின் போது பணி நியமனங்​கள் செய்​வ​தில் முறை​கேடு நடந்​துள்​ளது தெரிய வந்​துள்​ளது. அதனால் மேற்கு வங்​கத்​துக்கு அவப்​பெயர் ஏற்​பட்​டது.

பள்​ளி​களில் 26 ஆயிரம் ஆசிரியர்​களை நியமித்​த​தில் மிகப்​பெரிய ஊழல் நடந்​துள்​ளது என்று கொல்​கத்தா உயர் நீதி​மன்​ற​மும், உச்ச நீதி​மன்​ற​மும் தலை​யிட்​டன. இதனால் பணி நியமனம் செய்​யப்​பட்ட 26 ஆயிரம் பள்ளி ஆசிரியர்​களின் பதவி ரத்து செய்​யப்​பட்​டது. இதனால் மேற்கு வங்க அரசுக்கு மிகப்​பெரிய தலைக்​குனிவு ஏற்​பட்​டது.

இந்த அவப்​பெயரில் இருந்து மாநிலத்தை வெளியே கொண்டு வர முயற்​சிக்​கிறேன். வரும் பட்​ஜெட் கூட்​டத் தொடரில் பணி நியமனத்​துக்​காக புதிய கொள்கை அறி​முகம் செய்​யப்​படும். முந்​தைய ஆட்​சிக் காலத்​தில் அரசுக்கு ஏற்​பட்ட அவப்​பெயரை நீக்க விரும்​பு​கிறோம். மக்​களுக்கு நெருக்​க​மான, விருப்​ப​மான அரசாக இருக்க விரும்​பு​கிறோம். மேற்கு வங்​கத்​தி​லுள்ள தேர்வு மையங்​கள் கறைபட்​டுள்​ளன. மோச​மான தேர்வு மையங்​கள் என்று பெயர் ஏற்​பட்​டதன் காரண​மாக கிழக்கு ரயில்​வே, தென் கிழக்கு ரயில்​வே, வட கிழக்கு எல்லை ரயில்வே மண்​டலங்​கள் கூட, மேற்கு வங்​கத்​தில் தங்​களது தேர்வு மையங்​களை அமைப்​ப​தில்​லை. மேற்கு வங்​கத்​தைச் சேர்ந்த இளைஞர்​கள் அரசு பணி​களுக்​காகப் பிஹார், அசாம், ஒடிசா மாநிலத்தில் தேர்​வு​களை எழுதி வரு​கின்​றனர்.

மேற்கு வங்​கத்​தில் தற்​போது நியமன முறை​யின் போது, தேர்​வு​களில் நேர்​காணல் தேர்வு மூலம் அதிக மதிப்​பெண் வழங்​கப்​படு​கிறது. அது சரியல்ல. நேர்​காணல் தேர்வு குறைந்த அளவு மதிப்​பெண் கொண்​ட​தாக இருக்க வேண்​டும்.

முன்பு இருந்த திரிண​மூல் காங்​கிரஸ் அரசு ஓபிசி, எஸ்​சி, எஸ்​டி, மாற்​றுத் திற​னாளி, பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய வகுப்​பினருக்​கான (இடபிள்​யூஎஸ்) இடஒதுக்​கீடு​களை கூட முறை​யாக வழங்​க​வில்​லை. அந்த இடஒதுக்​கீடு​களை புறக்​கணித்து தன் இஷ்டத்​துக்கு திரிண​மூல் அரசு செயல்​பட்டு வந்​தது.

அவை அனைத்​தை​யும் நாங்​கள் மாற்​றப் போகிறோம். சட்​டப்​படி​யான இடஒதுக்​கீடு​கள் இனி வழங்​கப்​படும். வரும் பட்​ஜெட் கூட்​டத் தொடரில் இதற்​கான புதிய கொள்கை அறி​முகம் செய்​யப்​பட​வுள்​ளது. வெளிப்​படை​யான தேர்​வு​கள், முறை​யான விடைத்​தாள்​ திருத்​தும்​ பணி​கள்​ நடை​பெறும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.


Hindu Tamil 1 hour ago
Home Flash News