Select Location
All Locations
State
Region
City / District
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை முதல்​வர் விஜய் இன்று மாலை சென்​னை​யில் தொடங்கி வைக்​கிறார். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்​வ​ராகப் பதவி​யேற்​றுக் கொண்​டார்.

குழந்​தைகள், பெண்​களின் பாது​காப்​புக்​காக சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை உரு​வாக்​கப்​படும் என்று அறி​வித்த அவர், பதவி​யேற்பு விழா மேடை​யிலேயே அதுதொடர்​பான கோப்​பில் கையெழுத்​திட்​டார். இதைத் தொடர்ந்​து, அதிரடிப் படை​யின் ஐ.ஜி.​யாக பவானீஸ்​வரி நியமிக்​கப்​பட்​டார். இந்த படை​யில் மேலும், ஒரு எஸ்​.பி. 2 டிஎஸ்​பி, மற்​றும் 4 ஆய்​வாளர்​கள் உட்பட 30-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

சிங்​கப்​பெண் அதிரடிப் படை​யில் இடம்​பெறும் பெண் போலீ​ஸார் மற்​றும் பெண் எஸ்​.ஐ.களுக்கு நேவி ப்ளூ நிற சட்டை - காக்கி பேன்ட் என்ற சிறப்பு சீருடை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை திட்​டத்தை முதல்​வர் விஜய் இன்று தொடங்கி வைக்​கிறார். சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் இன்று மாலை 5 மணிக்கு நடை​பெறும் நிகழ்​வில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படையை முதல்​வர் விஜய் தொடங்கி வைக்​கிறார். விழாவுக்​கான ஏற்​பாடு​கள்​ தீவிர​மாக நடந்​து வரு​கின்​றன.


Hindu Tamil 1 hour ago
Home Flash News