இந்தியாவுக்கு எதிரான கால்பந்து போட்டி: இளம் படையை களமிறக்குகிறது பிரேசில்
புதுடெல்லி: பிரேசில் - இந்தியா ஆடவர் கால்பந்து அணிகள் இடையிலான நட்புரீதியிலான சர்வதேச போட்டி வரும் அக்டோபர் 3-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான 25 பேர் கொண்ட பிரேசில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வினிசியஸ் ஜூனியர், ராஃபின்ஹா, மார்க்வினோஸ் ஆகியோர் அனுபவமிக்க முக்கிய வீரர்களாக உள்ளனர். இதில் மார்க்வினோஸ் கேப்டனாக தொடர்கிறார். உலகக் கோப்பை தொடரில் கோல்கீப்பர்களாக இருந்த அலிசன், எடர்சன், வெவெர்டன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ஹூகோ சவுசா பிரதான கோல்கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். பெட்ரோ மோரிஸ்கோ, ஒட்டாவியோ ஆகியோர் மாற்று கோல் கீப்பர்களாக இடம் பெற்றுள்ளனர்.