மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிக்கு முன்னேறியது இந்தியா!
துபாய்: நடப்பு மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.
இந்த தொடரில் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அரையிறுதியில் வங்கதேசத்துடன் இந்திய அணி நேற்று (வியாழக்கிழமை) விளையாடியது.
இதில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷெபாலி வர்மா 40 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். பிரதிகா ராவல் 20, கேப்டன் ஹர்மன்பிரீத் 24, ரிச்சா கோஷ் 21 ரன்கள் எடுத்தனர்.