பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நடைபெற்ற கஜமுக சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சதுர்த்தி விழா செப்டம்பர் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
கஜமுக சூரசம்ஹாரத்தையொட்டி, இன்று மாலை திருநாள் மண்டபத்தில் வெள்ளி யானை வாகனத்தில் வாள், வில், அம்பு போன்ற ஆயுதங்களுடன் விநாயகர் எழுந்தருளினார். அவருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.