South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

கோயில் பணியாளர்களுக்கு திருமண கடன் உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

கோயில் பணியாளர்களுக்கு திருமண கடன் உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை: கோயில் பணியாளர்களுக்கான திருமணக் கடன் தொகையை உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதுநிலை கோயில் பணியாளர்களுக்கு ரூ.2 லட்சமாகவும், முதுநிலை அல்லாத கோயில் பணியாளர்களுக்கு ரூ.1 லட்சமாகவும் திருமணக் கடன் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் 2026 - 27ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக்கோரிக்கையின் போது, திருக்கோவில் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, திருக்கோவில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமணக்கடன் தொகை உயர்த்தி வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

இந்த உயர்த்தப்பட்ட திருமணக்கடன் தொகை இந்து சமய அறநிலையத்துறையின் இந்து சமய அறநிலையத்துறை கீழ் பணிபுரியும் அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் இந்த புதிய திருமணக் கடன் உயர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடன்தொகை திரும்பப்பெறும் காலம் அரசு ஊழியர்களுக்கான விதிகளின்படி 36 மாதத்தவணையில் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பணியாளர்களின் பணிநலன், குடும்பநலன் மற்றும் சமூகப்பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புக்கான பணப்பலன் மற்றும் மகப்பேறு விடுப்பு, திருமண கடன் உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் திருக்கோவில் பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📍 chennai
📰 Dinakaran Tamil
🕒 22 days ago

Related News

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு..!!
அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு..!!
ஊக்க பொன்மொழிகள்
ஊக்க பொன்மொழிகள்
தினசரி நாட்காட்டி
தினசரி நாட்காட்டி
⬅ Back
➕ Post Ad
To Ads ➡