South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடனும் சந்திப்பு

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடனும் சந்திப்பு

திருமலை: தமிழ்நாடு முதல்வர் விஜய் நேற்று பிற்பகல் 2.50 மணியளவில் தனி விமானத்தில சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா புறப்பட்டு சென்றார். முதல்வருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோரும் சென்றனர். முன்னதாக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் தமிழ்நாடு நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழுவினர், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் விஜயவாடா சென்றனர்.

முதல்வர் விஜய், மாலை 4 மணியளவில் விஜயவாடா கண்ணவரம் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து அவர் நேரடியாக காரில் விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா அம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கு அமைச்சர் நாராயணா மற்றும் அதிகாரிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர், முதல்வர் விஜய் கனகதுர்கா அம்மனை வழிபட்டார். பின்னர் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் வழங்கி பிரசாதம், அம்மன் போட்டோ வழங்கி சால்வை அணிவித்தனர்.

இதனையடுத்து மாலை 6 மணியளவில் முதலமைச்சர் சந்திரபாபுவின் வீட்டிற்கு சென்ற முதல்வர் விஜய் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஒரு மணிநேரம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கண்டலேரு அணையிலிருந்து சென்னைக்கு கூடுதலாக கிருஷ்ணா நீர் திறந்துவிட முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டார். கோதாவரி- கிருஷ்ணா- காவிரி நதிகளின் இணைப்பு குறித்து இருமாநில முதல்வர்களும் விவாதித்தனர்.

அப்போது இந்த ஆண்டு எல்நினோவின் தாக்கத்தால் கிருஷ்ணா நதி நீர் குறைந்து கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவினாலும், சென்னையின் தாகத்தைத் தணிப்பதில் ஆந்திர மாநில அரசு உறுதியுடன் இருப்பதாகவும் சென்னை மாநகருக்கு ஏற்கனவே 4.08 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு கூறினார். தண்ணீரின் இருப்பு மற்றும் தேவைகளைப் பொறுத்து மேலும் சிறிதளவு தண்ணீரைத் திறந்துவிடுவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

அப்போது ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ், ஆந்திரா அமைச்சர்கள் ராமாநாயுடு, நாராயணா, தமிழக அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிடடோர் கலந்துகொண்டனர். பிறகு தமிழ்நாடு முதல்வர் விஜய் கிருஷ்ணா நதிக்கரையை ஒட்டியுள்ள தசரா உற்சவ மைதானத்தில் நடந்த விஜயவாடா உற்சவ் 2.0- ல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தார். அப்போது, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உடனிருந்தார். பிறகு அவர் இரவு 8.50 மணிக்கு விஜயவாடா கண்ணவரம் விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

📍 chennai
📰 Dinakaran Tamil
🕒 17 days ago

Related News

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு..!!
அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு..!!
ஜி.எஸ்.எல்.வி.-எஃப்18 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-03 விண்கலம் விண்ணில் பாய்ந்தது!
ஜி.எஸ்.எல்.வி.-எஃப்18 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-03 விண்கலம் விண்ணில் பாய்ந்தது!
ஊக்க பொன்மொழிகள்
ஊக்க பொன்மொழிகள்
⬅ Back
➕ Post Ad
To Ads ➡