ரஷ்ய டீசலை அமெரிக்கா கொள்முதல் செய்வது ஏன்? மார்கோ ரூபியோ பிரத்யேக பேட்டி
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியா வந்துள்ளார். ரஷ்யாவுடனான டீசல் ஒப்பந்தம் மற்றும் இந்தியா மீதான வரிகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
உலகளாவிய அளவில் போரின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவுடனான டிரம்ப் நிர்வாகத்தின் டீசல் விநியோக ஒப்பந்தம் ஒரு “சமநிலைப்படுத்தும் நடவடிக்கை” என்றும் ரஷ்ய எண்ணெய் கொள்முதலுக்காக இந்தியா மீது வாஷிங்டன் விதித்துள்ள வரிகளால் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நிலவும் பதற்றங்கள் தீர்க்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெளிவுப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரது வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவையும், வர்த்தக உறவையும் மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ நெட்வொர்க்18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது அமெரிக்கத் தடைகள் விதிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்தத் தண்டனைகள் மற்ற நாடுகளுக்கும் பரவி, எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது உணரப்பட்டதாக மார்கோ ரூபியோ தெரிவித்தார். மேலும் அமெரிக்கா ஒரு சமநிலைப்படுத்தும் முயற்சியை மேற்கொள்கிறது. ஒருபுறம், இந்தப் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளை ஒரு உடன்படிக்கைக்கு வருமாறு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதற்கும், மறுபுறம் அவ்வாறு அழுத்தம் கொடுக்கும்போது சில சமயங்களில் அது மற்ற நாடுகளுக்கும் பரவி, எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்துகொள்வதற்கும் இடையில் அவர்கள் எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.