South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

’பதக்கம் வென்ற வீராங்கனை’; உயரிய ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்

’பதக்கம் வென்ற வீராங்கனை’; உயரிய ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்

பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலப்பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளப்பக்கத்தில், ”ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் இச்சாதனையைப் படைத்துள்ள வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களின் வெற்றி இளம்தலைமுறை பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும்.

அவர், எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

📍 Pondicherry
📰 Nakkheeran
🕒 10 days ago

Related News

புதுச்சேரி விடுதலை நாள்
புதுச்சேரி விடுதலை நாள்
தமிழ்நாடு நாள் - முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
தமிழ்நாடு நாள் - முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஹார்மர் பந்துவீச்சில் வென்றது தென் ஆப்பிரிக்கா
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஹார்மர் பந்துவீச்சில் வென்றது தென் ஆப்பிரிக்கா
⬅ Back
➕ Post Ad
To Ads ➡