South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

நெருங்கும் நவம்பர் 3; பேச்சுவார்த்தை, போர் - இரண்டிற்கும் தயாராகும் ஈரான் - என்ன நடக்கிறது?

நெருங்கும் நவம்பர் 3; பேச்சுவார்த்தை, போர் - இரண்டிற்கும் தயாராகும் ஈரான் - என்ன நடக்கிறது?

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனியை நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் சந்தித்தார். அமெரிக்காவுடனான பதற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

வருகிற நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ‘அதுவரை ஈரான் மீது அமெரிக்கா எந்தத் தாக்குதலும் நடத்தாது’ என்று அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

நவம்பர் 3-ம் தேதிக்கு இன்னும் பத்து நாள்களே உள்ளன. ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையே எந்தவொரு பாசிட்டிவான பேச்சுவார்த்தையும் நடந்ததாகத் தெரியவில்லை. ஹார்முஸ் நீர்ச்சந்தியும் முழுமையாகத் திறக்கப்படவில்லை.

நவம்பர் 3-ம் தேதி நெருங்குவதால், ஈரான் அடுத்தக்கட்ட நகர்வுகளைத் திட்டமிடத் தொடங்கிவிட்டது போலும். நேற்று ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனியை ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் காலிபாஃப் சந்தித்திருக்கிறார்.

இது குறித்து மொஜ்தபா தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தச் சந்திப்பில் அமெரிக்கா-சியோனிச (இஸ்ரேல்) எதிரி நாடுகளின் ராணுவப் படைகள், பொருளாதாரத் தடைகள் மற்றும் கருத்துப் பரப்புரைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ஈரானின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மொஜ்தபாவின் பதிவிலிருந்து நவம்பர் 3-ம் தேதிக்குப் பின், அமெரிக்காவை எதிர்கொள்வதற்கான பிளானை ஈரான் தயார் செய்கிறது என்று தெரிகிறது.

அராக்சியின் கட்டுரை
ஃபைனான்சியல் டைம்ஸ் நாளிதழில் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எழுதியுள்ள கட்டுரையில், “நியாயமான ஒரு தீர்வை எட்டுவதற்கு அமெரிக்காவிற்கு உண்மையான விருப்பம் இருக்கிறது என்றால், ராஜதந்திரத்திற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க ஈரான் தயாராக உள்ளது.

ஆனால், அமெரிக்கா ராஜதந்திரத்தைக் கைவிட்டுப் போரைத் தேர்ந்தெடுத்தால், அது நிச்சயமாக ஸ்ட்ரேட்டஜிக் தோல்வியில்தான் போய் முடியும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக, ஈரான் பேச்சுவார்த்தை, தாக்குதல் என இரண்டிற்கும் தயாராக உள்ளது. இனி முடிவு அமெரிக்காவின் கையில்தான் உள்ளது.

📍 Pondicherry
📰 Vikatan
🕒 8 days ago

Related News

இவங்க எல்லாம் MI கோச்சா..? தரமான பெயர்களை இறக்கிய மும்பை இந்தியன்ஸ்!
இவங்க எல்லாம் MI கோச்சா..? தரமான பெயர்களை இறக்கிய மும்பை இந்தியன்ஸ்!
தமிழகத்தில் 2.38 லட்சம் விவசாயிகள் கடன் தள்ளுபடி பெறுவதில் சிக்கல்
தமிழகத்தில் 2.38 லட்சம் விவசாயிகள் கடன் தள்ளுபடி பெறுவதில் சிக்கல்
“ரூ.5000 கோடி நிதி மோசடி செய்தவருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு? - கேள்வியெழுப்பும் உதயநிதி!
“ரூ.5000 கோடி நிதி மோசடி செய்தவருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு? - கேள்வியெழுப்பும் உதயநிதி!
⬅ Back
➕ Post Ad
To Ads ➡