ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா: திரு கொட்டகை அமைப்பதற்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா: திரு கொட்டகை அமைப்பதற்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி
11:30 AM Oct 23, 2026 IST
featured-imgfeatured-img
share
Share
fb
twitter
whatsapp
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும் திருமாலுக்கான ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் கருதப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ஆலயத்தில் பல்வேறு திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் மாதம் தோறும் நடைபெற்றாலும் வைகுந்த ஏகாதசி பெருந்திருவிழா ஆலயத்தின் பிரதான விழாவாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா 20.12.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை நடைபெற உள்ளது.
வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழாவின் முதல் ஏற்பாடாக திரு கொட்டகை அமைக்க பந்தல் கால் நடும் நிகழ்ச்சி ஆயிரம் கால் மண்டபம் முன்பாக இன்று நடைபெற்றது. துவாதசி திதி பூரட்டாதி நட்சத்திரம் தனுர் லக்னத்தில் காலை 10.30 மணி அளவில் கோவில் பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க திரு கொட்டகை அமைப்பதற்கான முகூர்த்தக்காலை நட்டனர்.
நடப்பாண்டு வரும் டிசம்பர் 9ஆம் தேதி திருநெடு தாண்டகத்துடன் வைகுந்த ஏகாதசி பெருந்திருவிழா துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மோகினி அலங்காரம் என்னும் நாச்சியார் திருக்கோலம் 19.12. 2026 சனிக்கிழமை அன்றும் பிரதான திருவிழாவான பரமபத வாசல் திறப்பு 20.12.2026 ஞாயிற்றுக்கிழமை அன்றும் நடைபெற உள்ளது.