South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டி: இடுப்பு தசை காயம் காரணமாக இஷான் கிஷன் விலகல்!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டி: இடுப்பு தசை காயம் காரணமாக இஷான் கிஷன் விலகல்!

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷன் இடுப்பு தசையில் காயம் காரணமாக விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (அக்டோபர் 24) கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ள இப்போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் டி20 போட்டியின் போதுஇஷான் கிஷனுக்கு வலது இடுப்பு தசையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் சீதான்சு கோடக், "இஷான் கிஷனுக்கு இடுப்புப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பேட்டிங் வரிசையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது குறித்து பலரும் விவாதித்தனர். ஆனால் அது திட்டமிடப்பட்ட மாற்றம் அல்ல, காயம் காரணமாகவே அவ்வாறு மாறியது. அவர் இந்தப் போட்டியில் விளையாடுவது கடினம்" என்றார்.

இஷான் கிஷனின் காயம் காரணமாக, அணியில் உள்ள மற்றொரு இளம் பேட்டரான வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு வைபவ் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. தற்போது தொடக்க வீரர்கள் சிறப்பான பார்மில் இருப்பதால், அவர் மாற்று வீரராகவே இருக்க வேண்டியிருந்தது. இருப்பினும், சூர்யவன்ஷியை தவிர ஷிவம் துபேவையும் களமிறக்கும் ஆப்ஷன் இந்தியாவின் வசம் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வெலிங்டன், ஆக்லாந்து மற்றும் ஹாமில்டன் ஆகிய நகரங்களில் மீதமுள்ள மூன்று டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

📍 chennai
📰 Dinakaran Tamil
🕒 8 days ago

Related News

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு..!!
அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு..!!
ஊக்க பொன்மொழிகள்
ஊக்க பொன்மொழிகள்
தினசரி நாட்காட்டி
தினசரி நாட்காட்டி
⬅ Back
➕ Post Ad
To Ads ➡