காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்; இந்திய அணி 5வது வெற்றி
அகமதாபாத்: முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் 13, மகளிர் பிரிவில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இரு தரப்பிலும் இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடந்து வருகிறது. மகளிரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள 4 போட்டியிலும் வென்று முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்து விட்டது.
வரும் 30ம் தேதி அரையிறுதியில் பி குரூப்பில் 2ம் இடம் பிடித்துள்ள இலங்கையுடன் மோதுகிறது. ஆடவர் ஏ பிரிவில் நேற்று இந்தியா 48-20 என தான்சானியாவை வீழ்த்தியது. இந்திய ரெய்டர் நீரஜ் நார்வால் 12, நவீன்குமார் 9 புள்ளி எடுத்தனர். இன்று இந்தியாவுக்கு ஓய்வு நாளாகும். நாளை இரவு 8 மணிக்கு கடைசி லீக் போட்டியில் இலங்கையுடன் இந்தியா மோதுகிறது.