South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

வெள்ளையாக இருந்தால்தான் வாய்ப்பு..தென்னிந்திய திரையுலகை விமர்சித்த ராதிகா!

வெள்ளையாக இருந்தால்தான் வாய்ப்பு..தென்னிந்திய திரையுலகை விமர்சித்த ராதிகா!

பிரபல நடிகை ராதிகா ஆப்தே, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவர் தென்னிந்திய திரையுலகில் வெள்ளையாக இருந்தால்தான் வாய்ப்பு என கடுமையாக சாடிய விவகாரம் வைரலாகி வருகிறது.
இந்திய அளவில் பெரிய நடிகையாக இருப்பவர், ராதிகா ஆப்தே. இவர், சமீபத்தில் ‘அக்கா’ எனும் வெப் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடர் குறித்த நேர்காணலில் அவர் பேசியிருக்கும் சில விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

ராதிகா ஆப்தே
தமிழ் திரையுலகில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மக்கள் மனங்களில் நன்று பதிந்தவராக இருக்கிறார் ராதிகா ஆப்தே. இவர், தற்போது தென்னிந்திய திரையுலகம் பற்றி பேசியிருப்பது வைரலாகி வருகிறது. இது குறித்துதான் இணையத்தில் பலரும் பேசி வருகின்றனர்

ராதிகா ஆப்தேவின் படங்கள்
ராதிகா ஆப்தே, முன்னர் ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்ததோடு சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், அதன் பிறகு வட இந்திய மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர் பின்னர் தென்னிந்திய படங்களில் நடிப்பதையே நிறுத்தி விட்டார்.
ராதிகா ஆப்தே அக்கா வெப் தொடர்
ராதிகா ஆப்தே, தற்போது கீர்த்தி சுரேஷுடன் சேர்ந்து ‘அக்கா’ எனும் வெப் தொடரில் நடித்திருக்கிறார். இது குறித்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த அவரிடம் ஏன் 2019க்கு பிறகு தமிழ் திரையுலகில் நடிப்பதே இல்லை? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் கொடுத்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா ஆப்தே வடநாட்டு நடிகைகள் குறித்து பேச்சு
ராதிகா ஆப்தே, வடநாட்டு நடிகைகள் வெள்ளையாக இருப்பதால்தான் தென்னிந்திய சினிமாவில் நடிக்க வைப்பதாகவும், தான் அதிகம் வெள்ளை இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், தென்னிந்திய நடிகைகளையே நடிக்க வைக்கலாமே, எதற்காக வட இந்திய நடிகைக்ளை தேடுகிறார்கள்? அதை நான் ஊக்குவிக்க விரும்பவில்லை என கூறினார்.

ராதிகா ஆப்தே குற்றச்சாட்டு
தென்னிந்திய பெண்களிலேயே அழகானவர்களும் திறமையானவர்களும் நன்றாக நடிப்பவர்களும் இருப்பதாகவும், அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றும் கூறிய ராதிகா ஆப்தே, எதற்காக பாம்பே வரை வேறு ஒரு நடிகையை தேடி வந்து நடிக்க வைத்து, அவருக்கு வேறு ஒருவரை டப்பிங் வேறு பேச வைக்கின்றனர் என்றும் கேட்டிருக்கிறார்.

📍 Pondicherry
📰 News 7 Tamil
🕒 1 day ago

Related News

இவங்க எல்லாம் MI கோச்சா..? தரமான பெயர்களை இறக்கிய மும்பை இந்தியன்ஸ்!
இவங்க எல்லாம் MI கோச்சா..? தரமான பெயர்களை இறக்கிய மும்பை இந்தியன்ஸ்!
தமிழகத்தில் 2.38 லட்சம் விவசாயிகள் கடன் தள்ளுபடி பெறுவதில் சிக்கல்
தமிழகத்தில் 2.38 லட்சம் விவசாயிகள் கடன் தள்ளுபடி பெறுவதில் சிக்கல்
“ரூ.5000 கோடி நிதி மோசடி செய்தவருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு? - கேள்வியெழுப்பும் உதயநிதி!
“ரூ.5000 கோடி நிதி மோசடி செய்தவருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு? - கேள்வியெழுப்பும் உதயநிதி!
⬅ Back
➕ Post Ad
To Ads ➡