South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (அக்.29) காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

3 வாகனங்களில் வந்த 15 லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். இதனையொட்டி, அவரது வீட்டு வாசலில் திமுகவினர் திரண்டு காத்திருக்கின்றனர்.

அங்கு மட்டுமல்லாது சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நேரு சகோதரர் ரவிச்சந்திரன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்

முன்னதாக, கடந்த செப்.5-ம் தேதி நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அப்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. அதனால், பேரவை நடக்கும்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்படுவது தமிழக அரசியலில் பரபரப்பை உருவாக்கியது.

இந்நிலையில் இன்று மீண்டும் சோதனை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் நவ.16 ஆம் தேதி நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், இந்த சோதனை அரசியல் வட்டாரத்தையும் தாண்டி அவரது குடும்பத்தினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, தனியார் பள்​ளி​களுக்கு அங்​கீகாரம் பெற்​றுத் தரு​வதாகக் கூறி ரூ.400 கோடி வரை மோசடி செய்​யப்​பட்ட வழக்​கில் திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் நேற்று கைது செய்யப்பட்டார். இன்று மற்றொரு திமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது.

📍 Pondicherry
📰 Hindu Tamil
🕒 1 day ago

Related News

இவங்க எல்லாம் MI கோச்சா..? தரமான பெயர்களை இறக்கிய மும்பை இந்தியன்ஸ்!
இவங்க எல்லாம் MI கோச்சா..? தரமான பெயர்களை இறக்கிய மும்பை இந்தியன்ஸ்!
தமிழகத்தில் 2.38 லட்சம் விவசாயிகள் கடன் தள்ளுபடி பெறுவதில் சிக்கல்
தமிழகத்தில் 2.38 லட்சம் விவசாயிகள் கடன் தள்ளுபடி பெறுவதில் சிக்கல்
“ரூ.5000 கோடி நிதி மோசடி செய்தவருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு? - கேள்வியெழுப்பும் உதயநிதி!
“ரூ.5000 கோடி நிதி மோசடி செய்தவருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு? - கேள்வியெழுப்பும் உதயநிதி!
⬅ Back
➕ Post Ad
To Ads ➡