South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு

“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு

திருநெல்வேலி: “அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேன்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிகாரத்தில் இருந்த கட்சிகளே போட்டியிடாமல் விலகின. அப்போது திமுகவும், நாதகவும் மட்டுமே போட்டியிட்டன. மற்ற எல்லா கட்சிகளும் போட்டியிலிருந்து விலகின. அதிகாரத்தை எதிர்த்து நிற்க முடியாமல் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விலகின. அப்போது போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி பொது வேட்பாளரா?

எனவே நான் அம்பாசமுத்திரத்தில் நான் பொது வேட்பாளராக களமிறங்குவதாக சொல்வது ஏற்புடையது அல்ல. நான் அம்பாசமுத்திரத்தில் மட்டுமல்ல, எப்போதுமே நான் பொது வேட்பாளர்தான். எல்லா சமுகத்துக்கும், எல்லா மதத்துக்கும், எல்லா உயிர்களுக்குமான நாம் தமிழர் கட்சியின் பொது வேட்பாளர் நான் தான்” எனத் தெரிவித்தார்.

📍 Tamilnadu
📰 Hindu Tamil
🕒 1 hr ago

Related News

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துளசிமணிக்கு அமைச்சர் பாராட்டு
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துளசிமணிக்கு அமைச்சர் பாராட்டு
ஊக்க பொன்மொழிகள்
ஊக்க பொன்மொழிகள்
தினசரி நாட்காட்டி
தினசரி நாட்காட்டி
⬅ Back
➕ Post Ad
To Ads ➡