South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

6 மாதத்தில் ரூ.40,000 கோடி கடன் ரீல்ஸ் தவெக ஆட்சிக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண்: எடப்பாடி அதிரடி

6 மாதத்தில் ரூ.40,000 கோடி கடன் ரீல்ஸ் தவெக ஆட்சிக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண்: எடப்பாடி அதிரடி

திருச்சி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தவெக ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், இந்த அரசு விலைவாசியை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் 1974-ல் கட்சியில் சேர்ந்து, உழைத்து 11 முறை தேர்தலில் நின்று மக்களுக்காக சேவை செய்து எம்எல்ஏ ஆனவன்.

ஆனால், என் அனுபவத்தின் வயதுகூட இல்லாத அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ரீல்ஸ் மூலம் எம்எல்ஏ ஆனவர். அவருக்கு என் அனுபவம் அளவிற்கு கூட வயது இருக்காது. மக்களுக்காக உழைத்தால் மட்டுமே நன்மதிப்பு கிடைக்கும். மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணத்தெரியாமல் இந்த அரசு விழிபிதுங்கி நிற்கிறது. கடந்த ஆறுமாத காலத்தில் ரூ.40,000 கோடி கடன் வாங்கியதே இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது.

மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. தினமும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி மற்றும் பாலியல் குற்றச்செய்திகளே அதிகமாக வருகின்றன. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர்கள் பயப்படும் அளவுக்கு போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சிறையிலிருந்து கைதிகள் எளிதாக தப்பிச் செல்கின்றனர். குற்றவாளிகளை கைது செய்ய முடியாத கையாலாகாத அரசாக இது செயல்படுகிறது.

நாங்கள் உழைத்து ஆட்சிக்கு வந்தவர்கள். டிவிகே ரீல்ஸ் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள். அவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. முதல்வர் விஜய் அரசு அலுவலரை போல காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்திற்கு வந்து மாலை 6 மணிக்கு வீட்டுக்குச் சென்று விடுகிறார். ரீல்ஸ் மட்டுமே இந்த ஆட்சியின் அஸ்திவாரமாக உள்ளது. இந்த ஆறு மாத தவெக ஆட்சிக்கு நான் கொடுக்கும் மதிப்பெண் ‘மைனஸ் பூஜ்ஜியம்’. இவ்வாறு அவர் கூறினார்.

📍 Cuddalore
📰 Dinakaran Tamil
🕒 15 hrs ago

Related News

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு..!!
அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு..!!
ஊக்க பொன்மொழிகள்
ஊக்க பொன்மொழிகள்
தினசரி நாட்காட்டி
தினசரி நாட்காட்டி
⬅ Back
➕ Post Ad
To Ads ➡