South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

கோவை மாநகரில் குற்றங்களைத் தடுக்க ‘நடை ரோந்து’ திட்டம்!

கோவை மாநகரில் குற்றங்களைத் தடுக்க ‘நடை ரோந்து’ திட்டம்!

கோவை: கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பையும் உறுதிப்படுத்த காவல் துறையினர் நடத்தும் ‘ஃபுட் பேட்ரல்’ எனப்படும் ‘நடை ரோந்து’ திட்டம், பயனுள்ளதாக உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகர காவல் நிர்வாகத்தில் 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 20 விசாரணைப் பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன. மாநகரில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் போலீஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபடுகின்றனர். தினமும் ஏறத்தாழ 150 (ஒரு பீட்டுக்கு மூவர்) பீட்களில் போலீஸார் ரோந்து செல்கின்றனர்.

ரோந்து என்றால், வழக்கமாக ஜீப், இருசக்கர வாகனங்களில் போலீஸார் மேற்கொள்வர். ஆனால், சமீபத்திய நாட்களாக கோவை மாநகர காவல் துறையில் ஃபுட் பேட்ரல் எனப்படும் நடை ரோந்து மேற்கொள்வது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகர காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “பொது மக்களின் பார்வையில் போலீஸார் தென்பட்டுக் கொண்டே இருந்தால் தான் சட்டம் ஒழுங்கு பாதிப்புகளையும், குற்றங்களையும் தடுக்க முடியும். ரோட்டில் போலீஸார் இருக்கின்றனர் என்றால் ரவுடிகள் அச்சமடைவர். குற்றச் சம்பவங்களில் ஈடுபட குற்றவாளிகள் தயங்குவர். நடை ரோந்துக்கு இது பிரதான காரணம்.

அடுத்தது, பொது மக்களுடன் நெருங்கி பழகவும், மக்கள் காவல்துறையினரை எளிதில் அணுகவும் நடை ரோந்து உதவுகிறது. தினமும் நடை ரோந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒருமுறைக்கு 2 முதல் 4 கி.மீ தூரம் வரை நடை ரோந்து மேற்கொள்கின்றனர்.

குறுகிய தெருக்கள், வாகனங்கள் செல்ல முடியாத வீதிகளில் இந்த நடை ரோந்து முக்கியத்துவம் பெறுகிறது. நடை ரோந்தின் போது பொதுமக்களை அணுகி அவர்களிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் போலீஸார் பேசுகின்றனர்” என்றனர்.

இதுதொடர்பாக மாநகர காவல்துறை துணை ஆணையர் (தெற்கு) கார்த்திகேயன் கூறும்போது, “போலீஸார் - பொதுமக்கள் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்த நடை ரோந்து உதவுகிறது. காவல் நிலையங்களுக்கு சென்று பொதுப் பிரச்சினைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க தயங்கும் மக்கள் அச்சமின்றி நடைரோந்து செல்லும் போலீஸாரிடம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ‘பொது இடத்தில் மது அருந்துதல், கூட்டமாக சேர்ந்து சட்டம் ஒழுங்கு பாதிப்புகளில் ஈடுபடுபவர்கள்’ குறித்து புகார்கள் அதிகளவில் பெறப்படுகிறது. அதன் மீது உடனுக்குடன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, குற்றங்கள் தடுக்கப்படுவதோடு, போக்குவரத்து விதிமீறல்களும் தடுக்கப்படுகின்றன” என்றார்.

📍 Tamilnadu
📰 Hindu Tamil
🕒 1 day ago

Related News

டெல்லியில் கட்டுப்பாடுகளுடன் பட்டாசுகளை வெடிக்க அனுமதி..!!
டெல்லியில் கட்டுப்பாடுகளுடன் பட்டாசுகளை வெடிக்க அனுமதி..!!
டிம் செய்​பர்ட், கிளென் பிலிப்ஸ் அதிரடி: கடைசி டி20 ஆட்​டத்​தில் நியூஸிலாந்து வெற்றி
டிம் செய்​பர்ட், கிளென் பிலிப்ஸ் அதிரடி: கடைசி டி20 ஆட்​டத்​தில் நியூஸிலாந்து வெற்றி
ஊக்க பொன்மொழிகள்
ஊக்க பொன்மொழிகள்
⬅ Back
➕ Post Ad
To Ads ➡