அமெரிக்காவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை: உடலை விரைவாக தாயகம் கொண்டுவர வலியுறுத்தல்
அமெரிக்காவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை: உடலை விரைவாக தாயகம் கொண்டுவர வலியுறுத்தல்
நியூயார்க்: அமெரிக்காவில் 2 இந்தியர்கள் வெவ்வேறு சம்பவங்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் (28), அமெரிக்காவின் நியூயார்க்கில் பீட்சா டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ரிச்மண்ட் ஸ்ட்ரீட் பகுதியில் பீட்சா டெலிவரி செய்ய சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் குர்தீப் சிங்கை தாக்கி கொள்ளையடிக்க முயன்றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.