South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

பூவிருந்தவல்லியில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கலில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சி!!

பூவிருந்தவல்லியில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கலில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சி!!

பூவிருந்தவல்லியில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கலில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சி!!
12:04 PM Aug 24, 2026 IST
featured-imgfeatured-img
share
Share
fb
twitter
whatsapp
சென்னை: பூவிருந்தவல்லியில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்ததால் 17 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கலில் பல்லி கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல்லி கிடந்த உணவைச் சாப்பிட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூவிருந்தவல்லி அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இன்று காலை உணவுத் திட்டத்தின் மூலம் பொங்கல் வழங்கப்பட்டது. இங்குள்ள மாணவர்களில் 10க்கும் மேற்பட்டோர் அந்தப் பொங்கலை உண்டனர். அப்போது அந்தப் பொங்கலில் பல்லி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக உணவு விநியோகத்தை நிறுத்தினர்.

இதேபோன்று, இந்த மையத்திலிருந்து அருகில் உள்ள மற்றொரு அரசுப் பள்ளியான மகளிர் அரசுப் பள்ளிக்கும் அதே உணவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கேயும் 4 மாணவர்கள் அந்தப் பொங்கலைச் சாப்பிட்டுள்ளனர். இந்த உணவை உண்டவுடன் அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக இந்த இரண்டு பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 17 மாணவர்கள் பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

📍 OMR
📰 Kalaignar News
🕒 20 days ago

Related News

smacy media
Vinayagar Chadhurthi !
Today's Motivation
Today's Motivation
Daily Calender
Daily Calender
Back
Post Ad
To Ads