நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 45 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா
புதுடெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள - திபெத் எல்லைப் பகுதிகளில் சுமார் 165 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 800 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களில் 133 பேர் இந்தியர்கள் இதுகுறித்து இந்திய விமானப்படை சமூக வலைதளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை தொடர்ந்து இந்திய வான்படை விரைந்து செயல்பட்டு சி-130ஜே வானூர்தி மூலம் சுமார் 10 டன் நிவாரண பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களை அனுப்பியுள்ளது