ரூ.4,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் : தமிழக அரசு அறிவிப்பு..!
தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.4000 கோடி மதிப்பில் ரூ.1000 கோடி மதிப்புள்ள 7 ஆண்டுக்காலப் பிணையப் பத்திரம், ரூ.1000 கோடி மதிப்புள்ள 8 ஆண்டுக்காலப் பிணையப்பத்திரம், ரூ.1000 கோடி மதிப்புள்ள 10 ஆண்டுக்காலப் பிணையப்பத்திரம் மற்றும் ரூ.1000 கோடி மதிப்புள்ள 30 ஆண்டுக்காலப் பிணையப்பத்திரம் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் டிசம்பர் 02, 2025 அன்று நடத்தப்படும்.