ஸ்குவாஷ் உலகக் கோப்பை: சுவிட்சர்லாந்தை 4-0 என வீழ்த்தியது இந்திய அணி
சென்னை: எஸ்டிஏடி ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னையில் நேற்று தொடங்கியது. 12 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று சுவிட்சர்லாந்துடன் மோதியது. இதில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.