நாட்டிலேயே முதல்முறை... சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் 33% பங்குகளை கைப்பற்றும் தமிழ்நாடு அரசு!!
சென்னை : சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் 33% பங்குகளை வாங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் முழு கட்டுப்பாடும் தமிழ்நாடு அரசிடம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை கடற்கரை மற்றும் பரங்கிமலை இடையிலான 25 கிமீ ரயில் சேவையை இந்திய ரயில்வே வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ நிறுவனத்தில் 67% பங்குகளை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, இந்திய ரயில்வேயிடம் ரூ. 600 முதல் ரூ.700 கோடி கொடுத்து பறக்கும் ரயில் சேவையை கைப்பற்ற உள்ளது.