‘டாக்ஸிக்’ அப்டேட்: நயன்தாராவின் லுக் வெளியீடு
’டாக்ஸிக்’ படத்தில் இருந்து நயன்தாராவின் லுக் உடன் கூடிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்ஸிக்’. கே.வி.என் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்து வருகிறது. ‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்குப் பின் வெளியாகும் யஷ் படம் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மார்ச் 19-ம் தேதி இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.