ரஷ்யாவிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்: உக்ரைன் அதிபர் புத்தாண்டு உரை..!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி 21 நிமிடம் உரையாற்றினார். ஏறக்குறைய 4-ம் ஆண்டை நோக்கி போர் சென்று கொண்டிருக்கும் நிலையில், உக்ரைனியர்களிடையே சோர்வு ஏற்பட்டு உள்ளது என குறிப்பிட்டார். ஆனால், அதனை வீழ்ச்சி என தவறாக கருதி விட கூடாது என்றும் கூறினார்.
நாங்கள் களைத்து போய் விட்டோமா? என கேட்டால்.. ஆம். அது உண்மைதான். அதற்காக நாங்கள் சரணடைய தயார் என்பது அதன் பொருளா? அப்படி யாரேனும் நினைக்கிறார்கள் என்றால் அது பெரிய தவறு என கூறினார். போரை நிறுத்தவே விரும்புகிறோம். ஆனால் நாங்கள் சரண் அடைய மாட்டோம். வலுவான ஒப்பந்தத்திலேயே நான் கையெழுத்திடுவேன். வலுவிழந்த ஒப்பந்தம் போர்கள் நீளவே வழிசெய்யும் என்றும் அவர் கூறினார். அதனாலேயே ஒவ்வொரு கூட்டத்திலும், ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும், ஒவ்வொரு முடிவும் அதற்கேற்ப எடுக்கப்படுகிறது.