விரைவில் டெலிவரி ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதிய பலன்
சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் டெலிவரி பணியாளர்கள் பல்வேறு பலன்களை பெறும் வகையில் வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுஉள்ளது. அதன்படி, ஆன்லைன் நிறுவனத்தில் ஒரு பணியாளர் குறைந்தது 90 நாட்கள் வேலை செய்திருந்தால் அவருக்கு மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதிய பலன், பெண்கள் என்றால் மகப்பேறு விடுப்பு போன்ற சமூக பாதுகாப்பு பலன்கள் விரிவாக்கம் செய்யப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட ஆன்லைன் நிறுவனங்களுக்காக பணியாற்றுவோர், ஆண்டுக்கு 120 நாட்கள் வேலை செய்திருந்தால் இந்த பலன்கள் கிடைக்கும்.