“அதிமுக சட்ட விதியை கேள்விக்குறியாக்கிவிட்டனர்” - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!
தேனியில் முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (03-01-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மீண்டும் இணையுமா என்று கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “நாங்கள் அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்னை அழைத்தார். அவரிடம் சென்று தமிழகத்தினுடைய அரசியல் களத்தினுடைய நிலவரங்களை தெரிவித்தேன். எங்களைப் பொறுத்தவரையில் அதிமுகவில் பிரிந்து கிடக்கின்ற சக்திகள் எல்லாம் ஒன்று சேர வேண்டும்.