ரோடு ஷோ விவகாரம்: நெறிமுறைகளை வெளியிடாததால் தலைமைச் செயலர், டிஜிபிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ்!
சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ–க்கள் தொடர்பான இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடாததை அடுத்து, தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர், டிஜிபிக்கு, வழக்கறிஞர் சூரியபிரகாசம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கரூரில் செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரி தவெக, அதிமுக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சிகளும், மதுரையைச் சேர்ந்த திருக்குமரன், பிரகாஷ் உள்ளிட்ட தனிநபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.