... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#எஃப் 35 ஜெட் வைத்திருக்கும் ஒரே நாடு

எஃப் 35 ஜெட் வைத்திருக்கும் ஒரே நாடு

சிங்கப்பூர் தனது முதல் F-35B போர் விமானங்களை இந்த ஆண்டு இறுதியில் பெற உள்ளது. இதன் மூலம் நில அடிப்படையிலான தளங்களில் இருந்து F-35B போர் விமானங்களை இயக்கும் உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் உருவாகும். 280 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட சிங்கப்பூரில் பாரம்பரிய விமானப்படை தளங்களை அமைப்பதற்கான இட வசதி மிகவும் குறைவு ஆகும். ஆனால், இந்த F-35B போர் விமானத்தை சிறிய கான்கிரீட் தளங்களில் கூட இயக்கலாம்.

சிங்கப்பூருக்கும் மற்ற நாடுகளுக்கும் பெரிதாக எந்த மோதல்களும் இல்லை. இருந்தாலும் தென் சீனக் கடலில் சீனாவின் ராணுவ சக்தி அதிகரித்து வருவது குறித்து சிங்கப்பூருக்கு கவலை இருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனாலேயே இந்த போர் விமானம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே சிங்கப்பூர் F-35 விமானங்களை மதிப்பீடு செய்ய தொடங்கிவிட்டது.

இதையடுத்து, 2019-ஆம் ஆண்டு $2.75 பில்லியன் ஒப்பந்தத்தின் கீழ் பழைய F-16 விமானங்களை மாற்றுவதற்காக நான்கு F-35B விமானங்களை வாங்க ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு கூடுதலாக எட்டு F-35A வகை விமானங்களை ஆர்டர் செய்தது. இதனால் சிங்கப்பூரின் மொத்த F-35 விமானப் படை 20 ஆக அதிகரித்தது.

Source : Indian Express Tamil

1 month ago

Home Flash News