... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#சஸ்பென்ஸ் ஓவர்.. திருமணத்தை அறிவித்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி

சஸ்பென்ஸ் ஓவர்.. திருமணத்தை அறிவித்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமணம் செய்து கொள்ள உள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

 தங்கள் திருமணத்துக்கு The Wedding of ViRosh என்று பெயரிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ViRosh என்பது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகிய பெயர்களின் சுருக்கமாக ரசிகர்கள் தங்களுக்கு சூட்டியதால் அதை பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நாங்கள் எதையும் திட்டமிடுவதற்கு முன்பே, எங்களுக்காக எதையும் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே.. நீங்கள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள். மிகுந்த அன்புடன் எங்களுக்கு ஒரு பெயரைச் சூட்டினீர்கள்.

எங்களை 'வி்ரோஷ்' என்று அழைத்தீர்கள். எனவே இன்று முழு மனதுடன், எங்கள் திருமணத்திற்கு உங்கள் நினைவாக 'தி வெடிங் ஆஃப் வி்ரோஷ்' என்று பெயரிடுகிறோம். எங்களை இவ்வளவு நேசித்ததற்கு நன்றி. நீங்கள் எப்போதும் எங்கள் வாழ்வின் ஒரு அங்கமே!" என்று பதிவிட்டுள்ளனர்.

இருப்பினும் எப்போது திருமணம் என்று அவர்கள் அறிவிக்கவில்லை. ஆனால் தகவலின்படி, பிப்ரவரி 26 அன்று மிக நெருக்கமானவர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற உள்ளதாக தெரிகிறது.

 மேலும் மார்ச் 4 அன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்றும் கூறப்படுகிறது. 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, நீண்ட நாட்களாகக் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Source : Malaimalar

7 days ago

Home Flash News