... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#கராச்சி யுஎஸ் தூதரகம் முன் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழப்பு; 30 பேர் படுகாயம்

கராச்சி யுஎஸ் தூதரகம் முன் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழப்பு; 30 பேர் படுகாயம்

கராச்சி: ஈ​ரான் உச்ச தலை​வர் காமேனி கொல்​லப்​பட்​டதைக் கண்​டித்து பாகிஸ்​தான் கராச்சியில் ஷியா அமைப்​பினர் ஞாயிற்​றுக்​கிழமை பிரம்​மாண்ட போராட்​டம் நடத்தினர். கராச்சியின் சுல்​தா​னா​பாத் பகு​தியி​லிருந்து மாய் கோலாச்சி நோக்​கிச் சென்ற பேரணி​யில் ஆயிரக்​கணக்​கானோர் பங்​கேற்​றனர். அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலுக்கு எதி​ராக முழக்​கங்​களை எழுப்​பிய​வாறு அமெரிக்க தூதரகத்தை நெருங்​கினர்.

நிலை​மை​யைக் கட்​டுப்​படுத்த பாகிஸ்​தான் போலீ​ஸார் கண்​ணீர்ப்​பு​கைக் குண்​டு​களை வீசினர். எனினும், தடைகளைத் தாண்டி அமெரிக்க தூதரக வளாகத்​தின் முக்​கியப் பகு​திக்​குள் போராட்​டக்​காரர்​கள் நுழைய முயன்​ற​போது, அங்​கிருந்த அமெரிக்க வீரர்​கள் துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். இதில் 12 பேர் உயி​ரிழந்​தனர், 30-க்​கும் மேற்​பட்​டோர் படு​காயமடைந்​தனர். இதையடுத்து பாகிஸ்​தானில் ஷியா பிரி​வினர் அதி​கம் வாழும் பகு​தி​களில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. அமெரிக்க தூதரகங்களில் துணை ராணுவப் படை​யினர்​ குவிக்​கப்​பட்​டுள்ளனர்​.

Source : Hindu Tamil

13 hours ago

Home Flash News