... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிப்பு

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிப்பு

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிப்பு! 05:27 PM Mar 02, 2026 IST featured-imgfeatured-img share Share fb twitter whatsapp நாகை: நாகை - இலங்கை பயணிகள் கப்பல் சேவை வரும் 6-ம் தேதி மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் மோசமான கடல் சீற்றம் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்ட நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து, வரும் 6-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இச்சேவை, தற்போது வானிலை மற்றும் கடல் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால் மீண்டும் செயல்படவுள்ளது.

 பல மாதங்களுக்குப் பிறகு இந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது இரு நாட்டு பயணிகள் மற்றும் வர்த்தகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நாகையிலிருந்து இலங்கை காங்கேசன்துறை செல்வதற்கு இருவழிப்பாதையாக 8000 ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை இலங்கையில் ஏற்பட்ட புயல் பாதிப்பு போன்ற காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட நாகை - இலங்கை கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது சுற்றுலா வாசிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Source : Dinakaran

1 hour ago

Home Flash News