பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி கட்டுமானங்களுக்கு தடை: தமிழ்நாடு அரசு, பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி, ஒரு கி.மீ. சுற்றளவுக்கு எந்த கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்க தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், 3 வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசு, பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. எந்தவித அறிவியல் பூர்வ ஆய்வும் மேற்கொள்ளாமல் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.