நடிகை நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த சி.வி. சண்முகம்.
தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து தேஜகூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டம் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தை விமர்சித்த சி.வி. சண்முகம், நடிகை நயனதாரவின் பெயரை குறிப்பிட்டு பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சிவி. சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தான் நயன்தாராவின் பெயரை வாய் தவறி உச்சரித்ததாகவும் அதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் அவர் அதற்காக நான் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.