... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#தேதி குறித்த ‘லெஜண்ட்’ சரவணன்!

தேதி குறித்த ‘லெஜண்ட்’ சரவணன்!

லெஜண்ட் சரவணன், புதிதாக நடித்துள்ள படம் ‘லீடர்’. இப்படத்தை துரை செந்தில் குமார் இயக்கியுள்ளார். லெஜண்ட் சரவணனே தயாரித்துல் உள்ளார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்திருக்க ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, 'பாகுபலி' பிரபாகர், சந்தோஷ் பிரதாப், 'லியோ' புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படம் தூத்துக்குடியை மையமாக வைத்து ஒரு உண்மை சம்பவ அடிப்படையில் ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. சமீபத்தில் டைட்டில் லுக் மற்றும் டைட்டில் கிளிம்ஸ் ஆகியவற்றை வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. இதுவரை வெளியான அனைத்திலுமே அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. மேலும் படத்திற்கு எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

இப்படம் ஏப்ரலில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. ஆனால் ஏப்ரல் 3-ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதாகவும் மார்ச் 21ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் இசை வெளியீட்டு விழா நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 9ஆம் தேதி தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.

Source : Nakkeeran

1 day ago

Home Flash News