... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்! உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு.

திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்! உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு.

சென்னை: திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது; தி.மு.கழகத்தின் முதன்மை அணியான இளைஞர் அணிக்கு, தமிழ்நாடு முழுவதும் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைகளிலும், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகளிலும் மற்றும் அனைத்து பாகங்களிலும் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து, மிகப் பெரிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.

 சட்டமன்றத் தேர்தலில், கழக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், தலைமைக் கழக ஒப்புதலுடன், இளைஞர் அணியின் 5 லட்சம் நிர்வாகிகளைக் கொண்டு 'களத்தில் இளைஞர் அணி' எனும் மாபெரும் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறோம்.
 ஒவ்வொரு பாகத்திற்கும் உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுடன் சேர்த்து, அந்த பாகத்தில் கழகத்தின் மீது ஆர்வமும் பற்றும் கொண்ட 10 இளைஞர்கள், பாக வாரியாக இளம் வாக்காளர்களை நேரில் சந்தித்து, கழகத் தலைவர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பார்கள். தேர்தல் நாளான 23.04.2026-க்குள் இரண்டு முறை வாக்காளர்களை சந்தித்து தேர்தல் பரப்புரையை மேற்கொள்வார்கள்.

Source : Dinakaran

1 hour ago

Home Flash News