... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
திமுக தீயசக்தி... தேமுதிக தீஞ்ச சக்தி..! நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு..!

திமுக தீயசக்தி... தேமுதிக தீஞ்ச சக்தி..! நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு..!

வில்லன் நடிகர் பொன்னம்பலம் ஸ்டண்ட்மேனாக சினிமாவுக்குள் வந்து, பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானார்.கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தவருக்கு, கடந்தாண்டு மேலுமொரு சிகிச்சை நடந்திருந்தது. தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ராவை ஆதரித்து, நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “தவெக தலைவர் விஜய், மக்களுக்காக பணத்தை இழந்து வந்துள்ளார். விஜயகாந்த் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. ‘பணத்தை வைத்து என்னடா பண்ணபோறீங்க’ என்றார். அவர் சொன்னதை போல விஜய் இன்று மக்களுக்காக வந்திருக்கிறார். வேட்பாளர் மிஸ்ராவை மிஸ் பண்ணீடாதீங்க” என்றார்.

தனது பேச்சின் போது ஆளுங்கட்சியான திமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை அவர் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், “திமுக என்பது ஒரு தீயசக்தி. அதேபோல், தேமுதிக என்பது தீஞ்ச சக்தி (கருகிப்போன சக்தி). இந்த இரண்டு சக்திகளிடம் இருந்தும் தமிழகத்தைக் காக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது,” என்று சாடினார். வேட்பாளர் மிஸ்ராவின் பெயரை முன்வைத்து சுவாரஸ்யமாகப் பேசிய பொன்னம்பலம், வாக்காளர்களைக் கவரும் வகையில் பின்வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மிஸ்ராவை மக்கள் எக்காரணம் கொண்டும் மிஸ் பண்ணிடாதீங்க. இவரை நீங்கள் தவறவிட்டால், உங்கள் வாழ்க்கையே மிஸ் ஆகிவிடும். அந்த அளவுக்கு மக்களுக்காக உழைக்கக்கூடியவர் எனத் தெரிவித்தார். மேலும் தீவிரமான உடல்நலப் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள பொன்னம்பலம், சோர்வின்றி தவெக-விற்காகப் பிரசாரம் செய்தது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source : Smacy News

1 hour ago

Home Flash News