கடனை திருப்பி செலுத்த நெருங்கிய கெடு.. கையை பிசைந்த பாகிஸ்தானுக்கு மேலும் 300 கோடி டாலர் கொடுக்க சவூதி சம்மதம்
பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப், சவூதி அரேபியா, கத்தாா், துருக்கி ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகப் புறப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான், சவூதி அரேபியாவிடம் வாங்கிய 350 கோடி டாலர் கடனை நடப்பு மாதத்துக்குள் திருப்பி செலுத்த வேண்டி இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு நிம்மதியளிக்கும் விதமாக ஏற்கெனவே வழங்கப்பட்ட 500 கோடி டாலா் நிதிக்கான காலக்கெடுவை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாகவும் சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பை உயா்த்தும் வகையில், அந்நாட்டு மத்திய வங்கிக்கு கூடுதலாக 300 கோடி டாலரை வைப்புத்தொகையாக வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது.
சவூதியின் இந்த உதவி அந்நாட்டின் பொருளாதார அழுத்தத்தைச் சற்றே குறைத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப், சவூதி அரேபியா, கத்தாா், துருக்கி ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகப் புறப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிதி நெருக்கடியைச் சமாளிக்க கடன்பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ள பாகிஸ்தான், சா்வதேச நாணய நிதியத்திடம் கூடுதல் நிதி கோருவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.