Select Location
All Locations
State
Region
City / District
திமுகவின் கருப்பு தேர்தல் அறிக்கையையே முதலில் தீயிட்டு கொளுத்த வேண்டும்: தமிழக பாஜக பதிலடி

திமுகவின் கருப்பு தேர்தல் அறிக்கையையே முதலில் தீயிட்டு கொளுத்த வேண்டும்: தமிழக பாஜக பதிலடி

சென்னை: “திமுகவின் நிறைவேற்றாத பொய் வாக்குறுதிகள் அளித்து தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்து துரோகம் செய்த மக்கள் விரோத திமுகவின் கருப்பு தேர்தல் அறிக்கையை முதலில் தீயிட்டு கொளுத்த வேண்டும்,” என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போராட்டம் செய்த நிலையில், அதற்குப் பதிலடியாக இவ்வாறு தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்கும், சமூக நீதிக்கான தொகுதி வரையறை மசோதாவை கருப்புச் சட்டம் என்று அவதூறு பேசி, எதிர்ப்பு தெரிவித்து தீயிட்டுக் கொளுத்தும் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் நிறைவேற்றாத பொய் வாக்குறுதிகள் அளித்து தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்து துரோகம் செய்த மக்கள் விரோத திமுகவின் கருப்பு தேர்தல் அறிக்கையை முதலில் தீயிட்டு கொளுத்த வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் 2026 மே 4-ம் தேதி அன்று தீய சக்தி திமுக ஆட்சியை தமிழகத்திலிருந்து மக்கள் அகற்றப் போகின்றதை முன்னிட்டு, திராவிட மாடல் திமுக ஆட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் ஒரு பகுதியாக - தாங்களே தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, தங்களுக்கு தாங்களே பிரியா விடை கொடுக்க கோலங்கள் போட்டு பிரிவுபச்சார விழாவை கனத்த இதயத்துடன் தமிழகம் முழுக்க நடத்தி வருவதைப் போல் இந்த கருப்புக்கொடி காமெடி கண்ணீர் தீ போராட்டம் அமைந்துள்ளது.


Hindu Tamil 11 hours ago
Home Flash News