Select Location
All Locations
State
Region
City / District
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை வெள்ளியங்கிரி மலை, குற்றாலம் அருவிக்கு செல்ல தடை!!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை வெள்ளியங்கிரி மலை, குற்றாலம் அருவிக்கு செல்ல தடை!!

கோவை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் வகையில் நாளை ஒரு நாள் மட்டும் கோவை குற்றாலம் அருவி மூடப்படுகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வெள்ளியங்கிரி மலைக்கு புதன்கிழமை மாலை 6 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்கம் போல் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்லலாம், இந்த உத்தரவை மக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட நேரத்தில் கோவை குற்றாலம் அருவி, வெள்ளியங்கிரி மலைக்கு மக்கள் யாரும் செல்ல முயற்சி செய்ய வேண்டாம். இந்த தடை மீறி குற்றாலம் அருவி, வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதை தடுக்க வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் கூறப்பட்டுள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News