Select Location
All Locations
State
Region
City / District
டைம் இதழ் ரிலையன்ஸுடன் கைகோர்க்கிறது; இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமாகும் 'TIME100 Next India'..

டைம் இதழ் ரிலையன்ஸுடன் கைகோர்க்கிறது; இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமாகும் 'TIME100 Next India'..

இந்திய இளைஞர்களுக்கும், வளர்ந்து வரும் தலைவர்களுக்கும் ஒரு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் முக்கிய மைல்கல்லாக அமையும்

உலகப்புகழ் பெற்ற TIME இதழ் மற்றும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் (Reliance) ஆகியவை இணைந்து முதன்முறையாக 'TIME100 Next India' என்ற முன்னெடுப்பை இந்தியாவில் ஏற்படுத்தவுள்ளது. டைம் இதழானது 103 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட ஊடகமாக உள்ளது. இது, உலகளவில் 12 கோடிக்கும் அதிகமான வாசகர்களைக் கொண்டுள்ளது. இது செல்வாக்கு மிக்க மனிதர்களை அங்கீகரிப்பதில் உலகத்தரம் வாய்ந்த நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் TIME இதழின் புகழ்பெற்ற 'TIME100 Next' வரிசையின் ஒரு பகுதியாக, இந்தியாவிற்கென பிரத்யேகமான ஒரு பதிப்பு தொடங்கப்பட உள்ளது. வரும் டிசம்பர் 2026-ல் மும்பையில் உள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் (NMACC) இதற்கான பிரம்மாண்டமான விழா மற்றும் 'கலா' (Gala) நிகழ்வு நடைபெறும்.

இந்தியாவிலும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் வாழும் 100 வளர்ந்து வரும் இளம் இந்தியத் தலைவர்களை அங்கீகரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். கலை, அறிவியல், வணிகம், விளையாட்டு மற்றும் சமூக நலன் என பல்வேறு துறைகளில் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறமையாளர்கள் இதில் பட்டியலிடப்படுவார்கள். நியூயார்க் நகரில் நடைபெற்ற வருடாந்திர TIME100 விழாவில், TIME நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெசிகா சிப்லி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் நீதா முகேஷ் அம்பானி ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இது TIME100 Next வரலாற்றில் முதல் சர்வதேசப் பதிப்பாகும். ரிலையன்ஸ் நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம், இளம் தலைமுறை திறமைகளை ஊக்குவிப்பதிலும், உலகத்தரம் வாய்ந்த தளங்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதிலும் ரிலையன்ஸ் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

இந்த பார்ட்னர்ஷிப் குறித்துப் பேசிய நீதா அம்பானி, "உலகின் சிறந்தவற்றை இந்தியாவிற்குக் கொண்டு வருவதும், இந்தியாவின் சிறந்தவற்றை உலகிற்கு எடுத்துச் செல்வதும் எங்களது லட்சியம்" என்று குறிப்பிட்டார். TIME இதழின் மூத்த அதிகாரி டான் மாக்சாய் கூறுகையில், ஒரு முக்கியமான காலகட்டத்தில் இந்தியாவின் அசாதாரணமான திறமைகளை உலகளாவிய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த இந்தத் தளம் உதவும் என்றார்.


24 News 1 hour ago
Home Flash News