Select Location
All Locations
State
Region
City / District
குட் நியூஸ்..!! தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவு..!

குட் நியூஸ்..!! தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவு..!

தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா அரசு வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நீர், மாத வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை கண்காணிப்பதற்கு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான உதவிகளை வழங்க, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு, மாதம் ஒருமுறை கூடி, நீர் விடுவிப்பு குறித்து ஆலோசனை நடத்துகிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழகம், புதுச்சேரிக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50வது கூட்டம் டில்லியில் இன்று (ஏப்ரல் 29) நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனால் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.


Smacy News 1 hour ago
Home Flash News