Select Location
All Locations
State
Region
City / District
ஜெர்மனியில் இருந்து 5 ஆயிரம் ராணுவ வீரர்களை திரும்பப்பெறும் அமெரிக்கா

ஜெர்மனியில் இருந்து 5 ஆயிரம் ராணுவ வீரர்களை திரும்பப்பெறும் அமெரிக்கா

வாஷிங்டன்,

 உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ளன. இந்த படைத்தளங்களில் அமெரிக்க படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளிலும், நட்பு நாடுகளிலும் அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் ஜெர்மனியில் அமெரிக்க படைத்தளம் உள்ளது. இந்த படைத்தளத்தில் 36 ஆயிரம் அமெரிக்க பாதுகாப்புப்படையினர் பணியாற்றி வருகின்றனர்.

 இதனிடையே, அமெரிக்கா, ஜெர்மனி இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா அவமானப்பட்டுவிட்டதாக ஜெர்மனி அதிபர் பிரைட்ரிச் மெர்ஸ் கூறினார். அவரது கருத்துக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து 5 ஆயிரம் ராணுவ வீரர்களை திருமப்பெறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அடுத்த 6 முதல் 12 மாதங்களில் ஜெர்மனியில் இருந்து 5 ஆயிரம் ராணுவ வீரர்கள் திரும்பப்பெறப்படுவார்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.


Dhina Thanthi 3 days ago
Home Flash News