Select Location
All Locations
State
Region
City / District
துபாய் ஏர்போர்டுக்கு மூடு விழா.

துபாய் ஏர்போர்டுக்கு மூடு விழா... ரூ.2.8 லட்சம் கோடியில் மெகா ப்ராஜெக்ட்; உலகை அதிரவைக்கும் திட்டம்

பரபரப்பான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாக மூடப்பட உள்ளது.
உலகிலேயே மிக பரபரப்பான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாக மூடப்பட்டு, புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. துபாய் விமான நிலைய சி.இ.ஓ, பால் கிரிஃபித்ஸ் அளித்துள்ள தகவலின்படி, தற்போதைய துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் படிப்படியாக 'அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு' மாற்றப்பட உள்ளன.
இந்தியர்களுக்கு இப்படி ஒரு சோதனையா? ரவுண்டு கட்டி அடிக்கும் நாடுகள்; 
ஆறுதல் தரும் நகரங்கள்
சுமார் 25.8 பில்லியன் பவுண்டுகள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.8 லட்சம் கோடிக்கும் மேல் செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த மெகா ப்ராஜெக்ட், முழுமையடையும் போது ஆண்டுக்கு 260 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக உருவெடுக்கும்.

2.8 லட்சம் கோடியில் உலகின் மிகப்பெரிய ஏர்போர்ட்

தற்போதைய துபாய் விமான நிலையம் 2032-ஆம் ஆண்டில் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்படும். அந்த சமயத்தில் துபாய் சர்வதேச விமான நிலையம் நிரந்தரமாக மூடப்படும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் 100 மில்லியன் பயணிகள் என்ற மைல்கல்லைத் தாண்டிவிடுவோம் என்றும் 2031-ஆம் ஆண்டிற்குள் துபாய் விமான நிலையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 114 மில்லியனாக உயரும் என்று பால் கிரிஃபித்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் இரண்டு ஏர்போர்ட்டுகள் ஏன் இயங்காது?

துபாயில் வெறும் 70 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இரண்டு பெரிய ஏர்போர்ட் ஹப்களை இயக்குவதில் எந்த பயனும் இல்லை. அதுமட்டுமின்றி, 2032-ஆம் ஆண்டிற்குள் தற்போதைய துபாய் விமான நிலையத்தின் அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் இயந்திரங்களின் ஆயுட்காலமும் முடிவுக்கு வந்துவிடும். எனவே, பெரும் தொகையை மீண்டும் முதலீடு செய்து பழைய ஏர்போர்ட்டைத் திறந்து வைப்பதை விட, புதிய இடத்திற்கு மாறுவதே பொருளாதார ரீதியாகச் சரியான முடிவாக இருக்கும்" என்று ஏர்போர்ட் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

2057-ல் முழுமையடையும் மெகா ப்ராஜெக்ட்

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளும் முழுமையாக நிறைவடைய 2057-ஆம் ஆண்டு வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் முழுமையாக முடியும் போது, 260 மில்லியன் பயணிகளைக் கையாளும் உலகிலேயே மிகப்பெரிய ஏர்போர்ட்டாக விஸ்வரூபம் எடுக்கும்.


Indian Express Tamil 58 minutes ago
Home Flash News