Select Location
All Locations
State
Region
City / District
உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும்! இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும்! இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும் என இளையராஜாவுக்கு முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதையடுத்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.

உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.


Dinamani 54 minutes ago
Home Flash News