ரொம்ப கம்மி வட்டியில் ரூ.20 லட்சம் கடன் உதவி.! விண்ணப்பிக்க அரசு அழைப்பு- என்னென்ன ஆவணங்கள் தேவை.?
குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் விராசாத்,கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் மூலம் 30 லட்சம் வரைகடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் உதவியை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடன் உதவித்திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சொந்தாக தொழில் செய்து முன்னேறும் வகையில் கடன் உதவித்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்கள் தொடர்பான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன். சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.