Select Location
All Locations
State
Region
City / District
வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.67,000 கோடி செலுத்தப்படுகிறது- நிதியமைச்சர் மரியவில்சன்

வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.67,000 கோடி செலுத்தப்படுகிறது- நிதியமைச்சர் மரியவில்சன்

வட்டி செலவினத்தால் தமிழ்நாட்டில் மூலதனச் செலவு குறைந்து கொண்டே வருகிறது என நிதியமைச்சர் மரியவில்சன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் தனி நபர் மீதான கடன் ரூ. 1,28,934 ஆக உள்ளது. வட்டி செலவினம் கடந்த 5 ஆண்டுகளில் 61 சதவீதம் குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசு செலுத்தும் வட்டி செலவால் மூலதன செலவு குறைகிறது. வட்டி செலவீனம் கடந்த 5 ஆண்டுகளில் 61 சதவீதம் குறைந்துள்ளது. சந்தை நிலவரத்தை பின்பற்றும் வகையில் வழிகாட்டு மதிப்புகள் திருத்தப்படவில்லை.சொத்துப்பதிவில் இழக்கும் வருவாய் தொடர்ந்து அதிகமாக உள்ளது. முத்திரைத்தாள் கட்டணம், சந்தை மதிப்பை விட குறைவாக உள்ளது. முந்தைய அரசு முதலீட்டுக்கு அல்லாமல் அன்றாட செலவுக்கு கடன் வாங்கியுள்ளது. அரசு, வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.67,000 கோடி செலுத்துகிறது. கனிம வளத்துறையில் நடந்த ஊழல், வருவாய் இழப்புக்கு முக்கிய காரணம்.

கர்நாடகா, மராட்டியம், குஜராத்தை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் மொத்த கடன் சதவீதம் அதிகம். கடந்த 5 வருடங்களில் வட்டி செலவு 61 சதவீதமாக உயர்ந்துள்ளது. 60 வருடங்களில் வாங்கிய கடனை விட திமுக ஆட்சியில் 5 வருடங்களில் அதிக கடன். சொந்த வரி வருவாயில் 3ல் ஒரு ரூபாய் கடனுக்கான வட்டிக்கே செல்கிறது. வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.67,000 கோடி செலுத்தப்படுகிறது. கடந்த 5 ஆண்டில் ரூ.4.87 லட்சம் கோடி கடன் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிறக்கும் ஒரு குழந்தை இணை மாநிலங்களவை விட மிக அதிகமான கடன் சுமையுடன் பிறக்கிறது. 2021ல் ரூ.5லட்சம் கோடியாக இருந்த கடன் 2026ல் ரூ.10லட்சம் கோடியாகியுள்ளது.

கொரோனா தொற்று காலத்தை விட திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை அதிகம். திமுக ஆட்சியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி. ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக வருவாய் கொண்ட மாநிலமாக இருந்தது தமிழ்நாடு. திமுக ஆட்சியில் நாட்டின் சராசரியை விட தமிழ்நாட்டின் வருவாய் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி.. 2021ல் ரூ.46538 கோடியாக இருந்த வருவாய்பற்றாக்குறை 2026ல் ரூ.78,324 கோடி. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை வரம்பு மீறி அதிகரித்துள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூலதனச் செலவினம் குறைந்துள்ளது.தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவில் வட்டிச் செலவீனம் 22.8 சதவீதம். தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவில் தவிர்க்க முடியாத செலவு 64.4 சதவீதம்” என்றார்.


Smacy News 2 hours ago
Home Flash News